உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக அன்னதானம்

ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக அன்னதானம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில்‚ வைகாசி விசாக அன்னதானம் நடந்தது. திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் நேற்று முன்தினம், வைகாசி விசாகத்தை முன்னிட்டு‚ சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள்‚ பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சதாசிவகிரி சுவாமிகள்‚ பிரபவானந்தா சுவாமிகள்‚ ஆத்மதத்வானந்தா‚ அம்ருதேஸ்வரானந்தா மற்றும் வேதாந்த பாடம் பயிலும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !