உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா ஸ்தலசயனபெருமாள் கோவில் தேர்?

சீரழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா ஸ்தலசயனபெருமாள் கோவில் தேர்?

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் தேர், பாதுகாக்கப்படாமல், திறந்தவெளியில் சீரழிகிறது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வை ணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் ஆகிய உற்சவங்களின் போது, சுவாமி திருத்தேர் வீதியுலாவிற்கு, மரத்தேர் பயன்படுத்தப்படுகிறது.

இக்கோவிலில், நீண்டகாலமாக தேர் இன்றி, சுவாமி, சகடை தேரில் வீதியுலா சென்றார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், சென்னை பக்தர் ஒருவர், புதிய மரத்தேரை, நன்கொடையாக அளித்தார். கோவில் வளாக வடகிழக்குபகுதியில், தேர் நிறுத்தப்பட்டு, தகடால் மூடப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. இரு ஆண்டுகளாக, மழைக்கால சூறாவளி காற்றில், தகடுகள் பெயர்ந்து கிழிந்தது. மீண்டும் கூரை புதுப்பிக்கப்படாமல், தேரைச் சுற்றி துணித்திரை போட்டு மூடப்பட்டது. கடந்த மாத பிரம்மோற்சவத்திற்காக அகற்றப்பட்ட திரை, மீண்டும் மூடப்படவில்லை. இந்நிலையில், கோடை வெயிலிலும், மழையிலும் தேர் சீரழிகிறது. சூறாவளி காற்றால் பாதிக்கப்படாத வகையில் கூரை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !