உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவிலில் தேரோட்டம்

பெருந்துறை: காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று நடந்தது. பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், சீதேவி அம்மன் கோவிலில், தீ மிதிக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வெள்ளை ஆடை அணிந்து, குண்டம் இறங்கினர். இந்நிலையில் நேற்று மாலை, தேரோட்டம் நடந்தது. விநாயகர் மற்றும் சீதேவியம்மன் எழுந்தருளிய இரண்டு தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காஞ்சிக்கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. தேர்கள் இன்று நிலை சேர்வதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !