உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் பவுர்ணமி அலங்காரம்

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் பவுர்ணமி அலங்காரம்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி திதியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், சிந்தலவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமியை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* கீழவதியம் தென்கரை பாசன வாய்க்கால், தென் கரையில் அமைந்துள்ள மல்லிஹார்ஜீனேஸ்வர் கோவிலில், பவுர்ணமி திதியை முன்னிட்டு, உலக அமைதிக்காகவும் மழைவேண்டியும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !