உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி புரவி எடுத்து பக்தர்கள் வழிபாடு

மழை பெய்ய வேண்டி புரவி எடுத்து பக்தர்கள் வழிபாடு

புதூர்: புதூர் கொடிக்குளத்தில் அய்யனார், விநாயகர், மந்தையம்மன், நொண்டிச்சாமி கோயில்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் வைகாசியில் அய்யனார் குதிரை எடுப்புத் திருவிழா நடக்கும்.  இந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் இருந்தனர். மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி அய்யனார் குதிரைகள், சுவாமி சிலைகள் செய்து கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினர்.  அய்யனார் கோயில் 2 நாட்கள் நடக்கும் திருவிழா முன்னிட்டு நேற்று நள்ளிரவு மதுரை மதிச்சியத்தில் செய்யப்பட்ட குதிரை, சுவாமி உருவங்களை விரதம் இருந்த கிராமத்தினர் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இன்று காலையில் பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்தும், மாலையில் முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !