உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை

துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை

திருப்போரூர்: திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்­றனர். திருப்போரூரில், பழமை வாய்ந்த திரவுபதிஅம்மன் கோவில் உள்ளது. இங்கு, 1ம் தேதி அக்னி வசந்த விழா, கொடியேற்­றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில் திருவீதியுலாவும் நடைபெற்­றது. மேலும், கோவில் வளாகத்தில் பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரத கூத்தும் நடைபெற்றது. இந்நிலையில்,18ம் நாளான நேற்று காலை,10:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி திருவிழாவும் நடை பெற்­றது. இதில் ஏராளமான பக்தர்கள் , தீ மிதித்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். விழாவில், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர், சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !