ரமலான் சிந்தனைகள் - 16: நல்ல குணமுள்ளவரின் தகுதி
ADDED :3047 days ago
இவர் நல்ல குணமுள்ளவர் என்று சொன்னால் அதற்கு மூன்று தகுதிகள் வேண்டும். அவர் ஒருவனைச் சந்திக்கும் போது சிரித்த முகத்துடன் சந்திக்க வேண்டும். தேவையுள்ள மக்களுக்காக தன் செல்வத்தைச் செலவிட வேண்டும். எவருக்கும் சிரமம் தரக்கூடாது. “இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளனின் தராசில் வைத்துநிறுக்கப்படும் பொருள்களிலேயே மிகவும்கனமான பொருள் அவனது நற்குணமாகும்.தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்ட வார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும்வெறுக்கின்றான்,” என்கிறார் நபிகள் நாயகம்.புரிந்து கொள்ளுங்கள். இறைவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க மேற்கண்ட மூன்று குணங்களையும் மனதில் கொள்ளுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:45 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி.