மழை வேண்டி திருவிளக்கு பூஜை
ADDED :3047 days ago
அச்சிறுப்பாக்கம்: மழை வேண்டி பழைய எடையாளம் கிராமத்தில் திருவிளக்கு பூஜை நடை பெற்றது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திலுள்ள கிராமம் பழைய எடையாளம். இக்கிராமத்தின் சுற்றுப்புறங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே , மழை வேண்டி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடை பெற்றது. நேற்று முன்தினம் இரவு நடை பெற்ற அப்பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டுஅம்மனை மனமுருக தரிசித்தனர்.