உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனித்திருவிழா நேற்று பிள்ளையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனித்தேரோட்டம் நேற்று காலை பிள்ளையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி கொடியேற்றமும் ஜூலை 7ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலை சிறபபு அபிசேகம், வீதியுலா நடக்கிறது .10ம் திருவிழா ஜூலை 7ம் தேதியன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வரும் வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !