பெத்தனசாமி கோயில் கும்பாபிஷேகம்
உசிலம்பட்டி: மானுாத்து பெத்தனசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 9 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று காலை 9:45 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடுகளும் அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர்களும் கிராம மக்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
* மேலுார் அருகே கொட்டகுடியில் உள்ள மந்தைக் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜையின் முடிவில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கொட்டகுடி, பனங்காடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் அரசப்பன்பட்டியில் உள்ள கம்ப காமாட்சி அம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.