பகவதி அம்மன் திருவீதி உலா
ADDED :3044 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து கொடிக்கால் தெருவில் உள்ள பகவதியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பக்தர்கள் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம் எடுத்து சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, லாலாப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி திருவீதி உலா நடந்தது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.