அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்
ADDED :3042 days ago
தேனி: தேனி அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. தேனி வாரச்சந்தையில் உள்ள இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் முக்கிய பகுதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலையில் அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்கிறார்.