உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரியில் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம்

சிறுவாபுரியில் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம்

கும்மிடிப்பூண்டி:  சிறுவாபுரியில், வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே , சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்­ளது. அக்கோவிலில், மயிலை, சிறுவாபுரி பிராத்தனை குழுவினர் சார்பில், நேற்று முன்தினம், வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, திருக்கல்யாண வைபவத்தில், திருமண வரன் வேண்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !