‘தினமலர்’ செய்தி எதிரொலி.. அகத்தீஸ்வரர் குளம் துார்வாரப்பட்டது
ADDED :3042 days ago
வளசரவாக்கம்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளம் துார்வாரப்பட்டு உள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில், இந்து அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ்வருகிறது. பருவமழை பொய்த்ததால், இந்த கோவில் குளமும் வறண்டது. இதை பயன்படுத்தி, கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்; வரும் மழைக்காலத்தில், குளத்தில் மழைநீர் தேங்க வழிவகுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, குளத்தை
துார்வாரி, கரைகள் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.