உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள்

தானம் செய்து விட்டீர்களா?

ஜகாத் எனப்படும் தானத்தின் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளில் இருந்து ஜகாத்தைப் பிரித்தெடுக்காவிடில் அது அசல் பொருளையே அழித்து விடும், என்கிறார் நபிகள் நாயகம்.தானம் செய்யாதவனின் நிலைமை
என்னாகும் தெரியுமா?

ஒருவனுக்கு அல்லாஹ் பொருள் வசதி அளித்திருந்தும், அவன் அதற்குரிய ஜகாத்தை கொடுக்காவிட்டால், அப்பொருள் மறுமை நாளில் கொடிய நச்சுத்தன்மை உடைய பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும். அப்பாம்பு கழுத்தில் வளையமாக சுற்றப்படும். அவனின் இருதாடைகளையும் பிடித்துக் கொண்டு, நான் தான் உன்னுடைய பொருள், நான் தான் உன்னுடைய செல்வக் களஞ்சியம் என்று சொல்லும். எனவே நோன்பு காலத்தில் அதிக தானம் செய்யுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:45 -மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:15 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !