உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கண்ணாடி சேவை

எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கண்ணாடி சேவை

பரமக்குடி: எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோத்ஸவ விழாவில்கண்ணாடி சேவை நடந்தது. இக்கோயிலின் வசந்தோத்ஸவ விழாவில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டார். தொடர்ந்து இரவு முழுவதும் எமனேஸ்வரம் வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 10:00 மணிக்கு கருப்பணசாமிக்கு சிறப்பு தீபாராதனை நிறைவடைந்து பெருமாள் கோயிலில் சேர்க்கையானார். இரவு 7:00 மணிக்கு பெருமாள் கண்ணாடி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று உற்சவசாந்தியும், நாளை கருடவாகனத்தில் பெருமாள் வீதிவலம் வரவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !