காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தீர்த்தவாரி கோலாகலம்
காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, தீர்த்த வாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, ஒன்பதாம் நாள் உற்சவமான தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்த சரஸ் குளத்தில், காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், கடும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் ஏராள பக்தர்கள் பங்கேற்றனர். குளம் ஆழமாக இருப்பதால், விபத்தை தவிர்க்கும் வகையில், குளத்தின் உள்பகுதியில் இரும்பு பைப்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள், குளத்தில், படகு மூலம் ரோந்து பணியில் இருந்தனர். பக்தர்கள் குளத்தில் இறங்காமல் பார்த்துக்கொள்ள போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. இரவு, 9:00 மணிக்கு பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.