பட்டிகுளம் மாலையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :29 minutes ago
நத்தம்: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி பட்டிகுளம் மாலையம்மன் கோவிலில் விசுவஹிந்துபரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி மாலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் பட்டிகுளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விசுவஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் ஆனந்த், நத்தம் ஒன்றிய தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட விசுவஹிந்துபரிஷத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.