மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா
அன்னூர்; மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் தெப்பத் திருவிழா நடந்தது.
பழமையான மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், 59 வது ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு வெவ்வேறு வாகனங்களில், பெருமாள் திருவீதி உலா நடந்தது. கடந்த 29ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 31ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி இரவு குதிரை வாகனத்தில், பெருமாள் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். இதையடுத்து தெப்பத் திருவிழா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு மகா தரிசனம் நடந்தது. மதியம் கொடி இறக்குதலும், காப்பு அவிழ்த்தலும், மஞ்சள் நீராடுதலும் நடந்தது. மகா தீபாராதனையுடன் நேற்று மாலை தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.