உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மாகாளியம்மன் கோவில் நாளை மகா சண்டியாகம்

திருப்பூர் மாகாளியம்மன் கோவில் நாளை மகா சண்டியாகம்

திருப்பூர் : மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, அவிநாசிக்கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நாளை மகா சண்டியாகம் நடக்கிறது. திருப்பூர், அங்கேரிபாளையத்தை அடுத்த அவிநாசிக்கவுண்டம்பாளையத்தில் மாகாளியம்மன்,
விநாயகர், பட்டத்தரசியம்மன், கருப்பராயன் கோவில்களில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தினமும் மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது. இதன் நிறைவு
விழாவை முன்னிட்டு, மகா சண்டியாகம் மற்றும் 108 சங்காபிஷேக விழா ஆகியன நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது.

காலை 6:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடக்கும் இந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கேற்க திருப்பணிக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !