உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனூர் கைக்கிளப்பட்டு சஞ்சீவராயர் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கனூர் கைக்கிளப்பட்டு சஞ்சீவராயர் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கனூர்: கைக்கிளப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்ஜநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனூர் அடுத்த கைக்கிளப்பட்டு சீதாராம லட்சுமண சஞ்சீவிராய ஆஞ்ஜநேய
சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. 13ம் தேதி காலை 8:00 மணிக்கு பிம்ப மண்டல பூஜை, பிற்பகல் 2:30 மணிக்கு மகா கலச திருமஞ்சனம் நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்து, கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு
சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !