உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுன குரு சித்தர் அவதார தினவிழா

மவுன குரு சித்தர் அவதார தினவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மவுன குரு சித்தர் அவதார தின விழா அனுசரிக்கப்பட்டது.  கும்பகோணம் அருகே மயிலாடுதுறைப்பகுதியில் உள்ள திருபுவனம் பகுதியில் மவுன குரு சித்தர் அவதரித்தார். ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் மவுன குரு சித்தர் ஆலயத்தில் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்கார தீபாரதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கு பெற்று மவுன குரு சித்தர் அருள் பெற்று சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பவுர்னமி, அமாவாசை தினங்களில் மவுன குரு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும்.இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கு பெறுவார்கள். அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !