உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரகாளியம்மன் கோவிலில் மழைவேண்டி யாகம்

வீரகாளியம்மன் கோவிலில் மழைவேண்டி யாகம்

மேலூர்: மேலூர் அருகே தும்பைபட்டியில்  கிராமத்து சார்பில் மழை பொழிந்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஸ்ரீ  வீரகாளியம்மன் கோவிலில் யாகசாலை மற்றும் வருண ஜெபம் நடைபெற்றது. யாகம் நடத்துவதற்கு தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக செலவு செய்து யாகத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து யாகம் செய்யப்பட்ட புனித தீர்த்தை கொண்டு வீரகாளியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழச்சியில் ஜாதி, மத  வேறுபாடு இல்லாமல் இஸ்லாமியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஊராட்சி செயலர் பிரபு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !