கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED :3080 days ago
கரூர்: கரூர் அருகே, கற்பக விநாயகர் மற்றும் கருப்பண்ண சுவாமி கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கரூர் அடுத்த, திருமாநிலையூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் கருப்பண்ண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த, 15ல் விக்னேஷ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு முரளி சிவாச்சாரியார் முன்னிலையில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருமாநிலையூர் ஆலய திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.