பூட்டை மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றம்
ADDED :3079 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில், கொடியேற்று விழா நடந்தது. சங்கராபுரம் வட்டம், பூட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கந்தசாமி, இளங்கோ, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, கொளஞ்சி, பூவராகவன், முருகன், ராஜா, திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.