திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3079 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம், மூன்றாவது வார்டு, கிழக்கு நாடார் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி, பூஜை நடந்தது. 8:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, அபிஷேகம் செய்தனர். இதையொட்டி, அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில், மூலவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காளிசெட்டியூர், பாலாண்டியூர், படுவக்காடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.