அங்காள பரமேஸ்வரி கோவிலில் நன்னீராட்டு விழா
ADDED :3079 days ago
தர்மபுரி: தர்மபுரி அருகே, இலளிகம் நகரில், அங்காள பரமேஸ்வரி கோவிலில் நன்னீராட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் கடந்த, 13 அன்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 14 அன்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர், 9:00 மணியில் இருந்து, 10:00 மணிக்குள் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு பூப்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.