உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித அந்தோணியார் சர்ச் திருவிழா

புனித அந்தோணியார் சர்ச் திருவிழா

அழகர்கோவில், மதுரை காதக்கிணறு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா ஜூன் 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.சி., பிஷப் இல்ல முதன்மை குரு ஜெயராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடக்கின்றன. இன்று(ஜூன் 17) வடக்கு வட்டார அதிபர் பாதிரியார் மரிய மைக்கேல் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடக்கிறது. நாளை பாதிரியார் ஜோசப் அந்தோணி தலைமையில் நன்றி திருப்பலியும், மாலையில் கொடியிறக்கமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !