உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி நற்கருணை ஆராதனை பவனி

உலக அமைதி வேண்டி நற்கருணை ஆராதனை பவனி

கிருஷ்ணகிரி: உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த நற்கருணை ஆராதனை பவனியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா ஆலயத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி, ஆலய பங்கு தந்தை சூசை தலைமையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. கிருஷ்ணகிரி சாந்தி நகரில் உள்ள மாதா கன்னியர் சபை மடத்தில், நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாத பிரார்த்தனை நடந்தது. பின், நற்கருணை ஆண்டவரை ஊர்வலமாக எடுத்து வந்து, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து, சிறப்பு பூஜை மற்றும் மறையுரை ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஆலய பங்கு தந்தை சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !