உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனை வணங்க நான்கு முறைகள்!

முருகனை வணங்க நான்கு முறைகள்!

முருகப்பெருமானை அன்பால் பூஜித்தல், ஆகமமுறையில் பூஜித்தல், பயன் கருதி பூஜித்தல், பயன் கருதாமல் பூஜித்தல் என நான்கு வகையாக வழிபடுவர்.குறவர்கள் செய்யும்வழிபாடு அன்பு வழிபாடு என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.கலித்தொகையில்குறிஞ்சிக்கலியில் குறவர்களின் அன்பு வழிபாடு சிறப்பாக சொல்லப்படுகிறது.மந்திரங்கள், புஷ்பங்கள் சமர்ப்பித்து அந்தணர்கள் செய்யும் பூஜையானதுஆகமவழிபாடு ஆகும்.இது கோவில்களில் செய்யப்படுகிறது.முடி காணிக்கை, காவடி, பால்குடம் போன்றவை பயன்கருதிச் செய்யும்வழிபாடாகும். சித்தர்கள் செய்யும் வழிபாடே மிகவும் உயர்ந்த ஞான வழிபாடு ஆகும். இதில் எதைதேர்ந்தெடுத்து வழிபட்டாலும், கருணைக்கடலான முருகன் அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !