சரநாராயண பெருமாள் கோவிலில் 23ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜை
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 23 ம்தேதி அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 23ம் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்தரிபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு விஸ்வரூம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறயைில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெருமாள் வைத்தியநாராயணனாக சேவை சாதிப்பதால் ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் தன்வந்திரி பெருமாளின் மகாபிரசாதமான பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.