திருப்பரங்குன்றம் கோயிலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!
ADDED :5185 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்படுத்த நிர்வாகம் தடை விதித்தது. மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கோயிலுக்குள் பயன்படுத்தப்பட்டு வந்ததால், லட்சுமி தீர்த்த குளம் மற்றும் கோயிலுக்குள் கழிவு கேரி பேக்குகளும் நிறைந்திருந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இவற்றின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ""பக்தர்கள், ஒப்பந்ததாரர்கள், கடைக்காரர்கள் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் தெரிவித்தார். இதுகுறித்து கோயிலுக்குள் அறிவிப்பு போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.