திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :3075 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நடந்த பிரதோஷ பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கொடி மரத்தில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள, நந்தியம் பெருமான் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.