உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில்,  பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் தீபாராதனை காட்டும் போது அந்த தீபத்தின் ஒளி கண்ணாடிபோல் லிங்கத் திருமேனியில் எதிரொளிப்பதைக் பார்க்கலாம், வசிஷ்டருக்கு ஜோதிவடிவாகக் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னி ஸ்தலம் என்கிறார்கள். இத்தலத்தில் நேற்று, பிரதோஷத்தையொட்டி நந்தி தேவருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காயநிர்மலேஸ்வரர், நந்தி தேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !