ராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.73.27 லட்சம்
ADDED :3155 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் செந்தில்வேலவன் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூபாய் 73 லட்சத்து 27 ஆயிரத்து 410 ரூபாயும், தங்கம் 160 கிராம், வெள்ளி 5 கிலோ 300 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், முதுநிலை கணக்காளர் பாண்டியன், கோயில் அதிகாரிகள் கக்காரின், ராஜாங்கம், அண்ணாதுரை, கமலநாதன், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.