கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3074 days ago
மரக்காணம் : மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 17ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதிஹோமம், கங்கை திரட்டல், வாஸ்து சாந்தி, அகினிப்ரதிஷ்டை, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், பிரவேச பலி, முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 18ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மஹாபூர்ணாஹூதி, மகாதீப ஆராதனை நடந்தது. கடந்த 19ம் தேதி காலை 10:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதன் பின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.