உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளங்கை நெல்லிக்கனி என்றால் என்ன?

உள்ளங்கை நெல்லிக்கனி என்றால் என்ன?

உள்ளங்கை நெல்லிக்கனி என கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? ஒருவர் சொன்ன விஷயம் தெளிவாகப் புரிந்தது என்பதற்கு உவமையாக  உள்ளங்கை நெல்லிக்கனி என்பர்.  ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் பெயர் ஹல்தாமலகர். இதன் அர்த்தம் உள்ளங்கை நெல்லிக்கனி என்பதாகும்.  அதாவது இவர் சிறுவனாக இருந்தபோது, சங்கரர், நீ யார்? எனக் கேட்டார்.  அதற்கு சீடர்,நான் என்றால் எதைக் கேட்கிறீர்கள். இந்த உடலையா!  ஆன்மாவையா? என்று பதிலளித்தாராம். ஜகத்குருவாக இருந்து அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த சங்கரர், இந்த பதில் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். மனிதனின் உண்மை நிலையை, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிவித்ததால் அவரை ஹஸ்தாமலகர் (உள்ளங்கை நெல்லிக்  கனி) என்று அழைக்கத் தொடங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !