திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்
ADDED :3073 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. ஜூலை 2 ல் தெப்ப உற்சவம், 3 ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.