உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் செல்ல நேரமில்லையா? இதையாவது செய்யுங்க!

கோயில் செல்ல நேரமில்லையா? இதையாவது செய்யுங்க!

சிலர் நிற்கக் கூட நேரமில்லாமல் பரபரப்பாகச் செயல்படுவர். இவர்கள் தங்கள் பணியைக் காரணம் காட்டி, கோயில் பக்கம் தலை காட்டுவதே  இல்லை. இப்படிப்பட்டவர்களையும் வழிபாட்டில் ஈடுபடுத்தவே கோயிலில் கோபுரம் கட்டப்படுகிறது. தூரத்தில் செல்லும்போது கோபுரத்தை  தரிசித்தாலே வழிபாடு செய்த பலன் கிடைத்து விடும். இதனை கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்று குறிப்பிடுவர். கோபுரத்தில் இறைவன்  வெளிப்படையாகவும், கர்ப்பகிரகத்தில் சூட்சுமமாகவும் வீற்றிருக்கிறார். சுப்ர பேத ஆகமத்தில், தூரஸ்ய சிகரே த்ருஷ்டவா யாவத் கைலாச பூதலம்  என்று கோபுரத்தின் பெருமை கூறப்பட்டு உள்ளது. அதாவது கோபுரம் எவ்வளவு தூரத்தில் தெரிகிறதோ, அதற்கு இடைப்பட்ட இடம் முழுவதும்  பூலோக கைலாசத்திற்குச் சமமானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !