உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொரவி கோவிலில் பிரதோஷ பூஜை

தொரவி கோவிலில் பிரதோஷ பூஜை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் உள்ள, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில்,  ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி,  நந்தீஸ்வரர்  ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு, அருகம்புல் மற்றும் செவ்வரளி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்திருந்தார். முன்னதாக, சிவனடியார்கள்  திருவாசகம் முற்றோதினர். தொரவி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி நாகேஸ்வரி சங்கர், விக்கிரவாண்டி பேரூராட்சி முன்னாள் சேர்மன் மலர்மன்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !