கிருத்திகை: குமரகோட்டத்தில் பக்தி சொற்பொழிவு
ADDED :3073 days ago
காஞ்சிபுரம் : கிருத்திகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் குமர கோட்டத்தில், சொற்பொழிவு நடந்தது. காஞ்சிபுரத்தில், திருக்குமர கோட்ட திருக்கோவில் வழிபாட்டுக்குழு, 97ம் ஆண்டு துவங்கி, செயல்படுகிறது. இக்குழு சார்பில், கிருத்திகை தோறும், காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 263வது, கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் காலை நடந்தது. குழு செயலர் வி.சரவணன், இறைவணக்கமும், கந்தர் அனுபூதி பாராயணமும் செய்தார். வழிபாட்டு குழு ஓதுவார் செல்வி வி.பத்மாவதி, அதிசயம் அனேகமுற்ற அண்ணாமலை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில், ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.