காளஹஸ்தி கோவில் வசூல் ரூ. 93 லட்சம்
ADDED :3073 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 93.18 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, எண்ணப்பட்டது.இதில், 93 லட்சத்து, 18 ஆயிரத்து, 714 ரூபாய் ரொக்கம், 413 கிலோ வெள்ளி மற்றும் 99 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.