உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் குளம் வறண்டது

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் குளம் வறண்டது

ராமநாதபுரம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயில் தெப்பக்குளம் வறண்டு போனது. ராமநாதபுரம் டவுன் பகுதியில் மட்டுமே 24 ஊரணிகள் இருந்துள்ளன . தற்போது பல ஊரணிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் பகுதியில் உள்ள தெப்பக்குளம் முக்கிய நீர் ஆதாரமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததன் காரணமாகதண்ணீர் முழுவதுமாக வற்றி, வறண்டு போயின. இப்பகுதியில் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோடை மழை பெய்யும் என, எதிர்பார்த்தனர். அதுவும் பெய்யவில்லை. தெப்பக்குளத்தின் உள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. இது போன்று குளம் வறண்டு போயுள்ள இந்த நேரத்திலாவது சீரமைக்க கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !