உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் ஆனி அமாவாசை கோவில்களில் வழிபாடு

குமாரபாளையம் ஆனி அமாவாசை கோவில்களில் வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆனி அமாவாசை நாளையொட்டி, அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம், கோட்டைமேடு, கள்ளிபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், அங்காளம்மன், பெருமாள், சிவன், சவுண்டம்மன், ஆஞ்சநேயர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், ஆனி அமாவாசை நாளையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பக்திப் பாடல்களை பாடினர். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !