உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா துவக்கம்

அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா துவக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு வருடமும் ஆனி பிரமோற்சவ விழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இன்று காலை  10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சாமி மற்றும் அம்மனுக்கு  அபிஷேக ஆராதனைகள் தினமும் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியார்களின் நிகழ்ச்சி நடைபெறும். பத்தாம் நாள் விழாவாக, திருக்கல்யாணம் நடைபெறும். மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை போன்று இது விசேஷம் பெற்றது. பதனோறாம் நாள் தேரோட்டம் நடைபெறும். முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக வந்து நிலையை அடையும். ஒவ்வொரு நாளும் சாமி விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஏற்பாடுகளை  செயல் அலுவலர் தலைமையில் விழா கமிட்டியினர்  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !