உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் உறுதி பூசுதல் வழங்கும் விழா

சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் உறுதி பூசுதல் வழங்கும் விழா

சூரமங்கலம்: திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில், உறுதி பூசுதல் வழங்கும் விழா நடந்தது. சூரமங்கலம், திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில், கடந்த, 18ல் அருட்தந்தை மார்ட்டின்
கிறிஸ்துதாஸால், திருப்பலி கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலை, 6:00 மணிக்கு, தேர் பவனி நவநாள் திருப்பலி நடந்தது.

நேற்று காலை, 8:00 மணிக்கு, திருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் வழங்கல் விழா நடந்தது. அதில், சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் மக்களுக்கு உறுதி பூசினார். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஏசுவின் உடலின் சக்தியை பெற்றனர். மாலை, 7:00 மணிக்கு, முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது.

* ஏற்காட்டில், திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா, ஒரு வாரமாக நடந்தது. அதன் இறுதி நாளான நேற்று, ஆண்டவர் உருவ சிலையை, மின்விளக்கு மற்றும் பூக்களால் ஜோடித்து, தேரில் வைத்து, பவனி எடுத்துச்சென்றனர். ஆலய வளாகத்தில் துவங்கிய பவனி, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன், டவுன் காந்தி பூங்கா, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், ஜெரீனாக்காடு, கோவில் மேடு ஆகிய பகுதிகளை கடந்து, மீண்டும் கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், ஜெபம் செய்தும், இறைபாடல் பாடியும் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !