சேத்துப்பட்டு கருமாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3069 days ago
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, கருமாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கரிப்பூர் கிராமத்தில், கிராம காவல் தெய்வமான கருமாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கிராம மக்களால், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, வேத மந்திரம் முழங்க, யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை கொண்டு சென்று, கருமாத்தம்மன் மூலவர் சன்னதி மேல் உள்ள கலசத்தில் நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.