உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனகம்மாசத்திரம் பனப்பாக்கத்தம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

கனகம்மாசத்திரம் பனப்பாக்கத்தம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

கனகம்மாசத்திரம்: பனப்பாக்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் அடுத்த, பழைய பனப்பாக்கம் கிராமத்தில்
பனப்பாக்கத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து. கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில்,
மூன்று யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு, கணபதி பூஜை மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது.தொடர்ந்து, கிராம தேவதை பூஜை, கோ பூஜை கரிவலம் வீதியுலாவும், காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், கலச ஊர்வலம் நடைபெறுகிறது. காலை, 9:30 மணிக்கு, கோவிலில் அமைக்கப்பட்ட புதிய விமான கலசத்திற்கு நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !