உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோயில் மன்னர் முத்துவடுகநாதர் குருபூஜை

காளையார்கோயில் மன்னர் முத்துவடுகநாதர் குருபூஜை

காளையார்கோயில்: சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாத தேவரின் 245வது குரு பூஜை விழா நடைபெற்றது. நேற்று காலையில் சோமேஸ் வரர் கோயில்
முன்புள்ள மன்னர் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மன்னரின் நினைவிடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அபஷேகம் நடைபெற்றது. ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை
தலைவர் கோபால் துரை, கோவை தொழில் அதிபர் பரமசிவம், மன்னர் முத்துவடுகநாதர் ராணிவேலுநாச்சியார் மக்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் துரை ராஜ், செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் முத்துச்சாமி, வீரபேரரசர் முத்துவடுகநாதர் அறக்கட்டளை தலைவர் மணிமுத்து அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !