உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. எடுக்காகோரி தோப்பு பகுதியில் ஹஜரத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. மஸ்ஜித் தாகுவா முஸ்லிம் டிரஸ்ட் சார்பில் பாம்புரணி பகுதியில் ஜாகீர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கிளை செயலாளர் செய்யது அப்தாஹிர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. அப்துல்காதர் ஆலிம் பள்ளி சார்பில் ஜாமத் தலைவர் அசன் அலி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈத்கா மைதானத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. கீழக்கரை: கீழக்கரை பள்ளி வாசல், திடல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு முன்பு பயான் எனும் மார்க்க சொற்பொழிவு செய்யப்பட்டது. நேற்று காலை 8:00 மணி முதல் பொதுத்தொழுகைக்காக பள்ளிவாசல்களிலும், மைதானத்தின் திடல்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

கிழக்குத்தெரு அப்பா பள்ளி, குளங்கரைப்பள்ளி, மேலத்தெரு புதுப்பள்ளி, ஓடைக்கரைப்பள்ளி, பழைய குத்பா பள்ளி, ஜூம்மா பள்ளி, வடக்குத்தெரு, தெற்குத்தெரு பள்ளி, கடற்கரை பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது. பெண்கள் தொழுகை செய்ய தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெரிய கண்மாய் அருகே ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ஜிம்மா பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மாலையில் புலவரப்பா தர்ஹாவில் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போன்று ஆனந்துார், ராதானுார், பனைக்குளம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !